சென்னை ; பிரதமர், ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடியபோது, ராணுவ வீரர்கள் சுராங்கனி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களை பாடினர். அதை பிரதமர் 'டுவிட்டரில்' பகிர, ஏ.ஆர்.ரஹ்மான் அதை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை, கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது, தமிழக ராணுவ வீரர்கள் சிலர், 'சுராங்கனி...' என்ற பாடலை பாடி மோடியை வரவேற்றனர்.
அதை, தன் டுவிட்டர் பக்கதத்தில் பகிர்ந்த மோடி, 'தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்' எனக் கூறியுள்ளார்.
அதேபோல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'தாய் மண்ணே வணக்கம்' என்ற பாடலின் ஹிந்தி பதிப்பையும் ராணுவவீரர்கள் பாடியுள்ளனர். அதையும் மோடி சமூகவலைதளத்தில் பகிர, அதை தன் சமூக வலைதள பக்கத்தில், ஏர்.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.