பிரிட்டனை விற்று விட மாட்டார்: ரிஷி சுனக்கை இனரீதியாக விமர்சித்தவர்களுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் பதிலடி

Updated : அக் 26, 2022 | Added : அக் 26, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கை இனரீதியாக விமர்சித்தவர்களுக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார். பிரிட்டன் காலனியாக்கப்படவில்லை எனக்கூறியுள்ளவர், நீங்கள் ரிஷி சுனக்கை கொள்கை ரீதியாக எதிர்க்கவில்லை. அவரது நிறத்தை வைத்து எதிர்க்கிறீர்கள். அவர், பிரிட்டனை இந்தியாவிடம் விற்று விட மாட்டார்
Trevor Noah, Racists, Rishi Sunak, UK, India, ரிஷி சுனக், பிரிட்டன்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன்: பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கை இனரீதியாக விமர்சித்தவர்களுக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார். பிரிட்டன் காலனியாக்கப்படவில்லை எனக்கூறியுள்ளவர், நீங்கள் ரிஷி சுனக்கை கொள்கை ரீதியாக எதிர்க்கவில்லை. அவரது நிறத்தை வைத்து எதிர்க்கிறீர்கள். அவர், பிரிட்டனை இந்தியாவிடம் விற்று விட மாட்டார் எனக்கூறியுள்ளார்.பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 42, நேற்று பொறுப்பேற்றார். பழமைவாத கட்சித் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்ற பின், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றார். ஆனால், ரிஷி சுனக்கை பிடிக்காத சிலர் அவரை இனரீதியாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவாக் பதிலடி கொடுத்துள்ளார். ' தி டெய்லி ஷோ' என்ற நிகழ்ச்சியில் பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில்,ரேடியோ நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிஷி சுனக்கை இன ரீதியாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தார். பிறகு, அவரிடம் பேசும் ஒருவர், தான் பாகிஸ்தான் அல்லது சவுதி பிரதமராக இருந்தால் நன்றாக இருக்குமா? இந்த விஷயங்கள் முக்கியமானவை. 85 சதவீத வெள்ளை மக்கள் வசிக்கும் பிரிட்டன், அவர்களை பிரதிபலிக்கும் பிரதமரையே பார்க்க விரும்புகிறது எனக்கூறுகிறார்.latest tamil news


இதனை குறிப்பிட்டு பேசும் டிரெவர் நோவா, அவருக்கு நல்ல கருத்து கிடைத்துள்ளது. ஆங்கிலேயர்கள், தங்களை போல் யாரும் இல்லாதவர்கள் வசிக்கும் நாட்டை ஆள நினைத்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடிகிறதா? அந்த உலகம் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க முடியுமா? இனரீதியாக விமர்சனம் செய்பவர்கள் எப்பவும் காலனித்துவத்தை பாதுகாக்கிறார்கள். தாங்கள் காலனித்துவப்படுத்தப்படுவதை உணரும் வரை அதை அவர்கள் வெறும் வணிகமாகவே நினைக்கின்றனர். பிரிட்டன் மக்கள் காலனித்துவப்படவில்லை. புதிய பிரதமரும் பிரிட்டனை சேர்ந்தவர் தான். முதல் நாளிலேயே மேடை ஏறி, நான் மொத்த நாட்டையும் இந்தியாவிற்கு விற்க போகிறேன்.... இது பழிவாங்கும் நேரம்.... இது தான் எங்களின் திட்டம்... தீபாவளி வாழ்த்துகள்.... எனக்கூற மாட்டார். இவ்வாறு டிரெவர் நோவா பதிலடி கொடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (31)

Sugumar - Batlagundu ,இந்தியா
28-அக்-202205:31:16 IST Report Abuse
Sugumar Sir our hindu british prime minister honourable Rishisunak your full supports for british people for their development wanted first it reflect indians good charactor against foreigns
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-202210:12:10 IST Report Abuse
HONDA அந்த பயம் இருக்கிற அவரை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்
Rate this:
Yokiyan - Madurai,இந்தியா
27-அக்-202211:44:42 IST Report Abuse
Yokiyanஅவரை people elect பண்ணல...
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
26-அக்-202220:47:34 IST Report Abuse
GANESUN ,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X