வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தியின் படத்துக்கு அருகில் கடவுள் லட்சுமி, விநாயகரின் படங்களையும் அச்சடிக்க வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாடு செழிப்படையும்
புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு அருகில் லட்சுமி, விநாயகரின் படங்களையும் அச்சடிக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்களையும் அச்சடித்தால் நாடு செழிப்படையும். ரூபாய் மதிப்பு சரிவதை கடவுள் படங்கள் தடுக்கும்.
இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது.
அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும்.மாநகராட்சி தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருவதாகவும், டில்லி மக்கள் பா.ஜ.,வை புறக்கணிப்பார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யும் முயற்சிகள் தவிர, எல்லாம் இறைவனின் ஆசிர்வாதம் வேண்டும். கரன்சி நோட்டுகளில் லட்சுமி- விநாயகர் உருவங்களை அச்சடித்தால், பொருளாதாரத்தை சீரமைக்க பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.