யார் அழுக்கு மனிதர்?

Updated : அக் 26, 2022 | Added : அக் 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
குளிக்காமலே வாழ்ந்து வந்த உலகின் அழுக்கு மனிதர் என்ற பட்டத்தை சுமந்திருந்த ஒருவர் தனது 94 வயதில் இறந்துவிட்டார்,அதுவும் குளிப்பாட்டியதால்..ஈரான் நாட்டில் தெற்கு மாகாண பகுதியில் உள்ள பார்சில் அருகே உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் அமா ஹாஜி,இவர் யார்? எப்படி வந்தார்? என்பதைச் சொல்லும் தலைமுறையினர் மறைந்துவிட்டனர், எப்போது குளித்தார் என்றுlatest tamil news

குளிக்காமலே வாழ்ந்து வந்த உலகின் அழுக்கு மனிதர் என்ற பட்டத்தை சுமந்திருந்த ஒருவர் தனது 94 வயதில் இறந்துவிட்டார்,அதுவும் குளிப்பாட்டியதால்..


ஈரான் நாட்டில் தெற்கு மாகாண பகுதியில் உள்ள பார்சில் அருகே உள்ள தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் அமா ஹாஜி,


இவர் யார்? எப்படி வந்தார்? என்பதைச் சொல்லும் தலைமுறையினர் மறைந்துவிட்டனர், எப்போது குளித்தார் என்று கேட்டால் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் என்று ஆளாளுக்கு சொல்வர் ஆக மொத்தத்தில் அவர் எப்போதும் குளித்தது இல்லை என்பது தெரிகிறது.


latest tamil news

மோசமான உணவுகளையும் கழிவு நீரையும் குடித்து வாழ்ந்தவர் அவர் வரலாறைச் சொல்கின்றனர்


சாக்கு போன்ற உடையும் அழுக்கு படிந்த உடலும் அதனால் ஏற்படும் நெடியும் யாரையும் அவருடன் நெருங்கவிடவில்லை அவரும் அதை விரும்பவில்லை


ஊருக்கு வெளியே வானாந்திரமான இடத்தில் கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்த மனிதர் நேற்று இறந்துவிட்டார்


உலகம் முழுவதும் அழுக்கு மனிதர் என்று அறியப்பட்டவர் என்ற தகவல் ஊடகங்களில் உலா வருகிறது.


latest tamil news

உண்மையில் அவரை விட உள்ளத்தில் நிறயை அழுக்குகள் உள்ள மனிதர்களால்தான் அவர் அழுக்கு மனிதரானார்


நமது கிராமத்து பெரியவர் ஒருவர் இப்படி இருப்பது நமக்கல்லவா அவமானம் என்று கிராமமே கூடியல்லவா அவருக்கு நல்லது செய்திருக்கவேண்டும்.


அவரை பற்றி டாக்குமெண்டரி எடுத்தவர்கள் அவர் படித்தவர் போலத்தான் பேசுகிறார் போரும் அதன் தீய விளைவுகளையும் அலசுகிறார் என்று சொல்கின்றனர்


ஆக வெளியாட்கள் வந்து பேசமுடியும் என்ற நிலையில் உள்ள அந்த விவரமான மனிதரை கோமாளியாக பைத்தியமாக பார்த்தார்களே தவிர உள்ளூர் மக்கள் பேச முயற்சிக்கவில்லை என்றால் பேசாத நீங்கள் அல்லவா அழுக்கு மனிதர்கள்


அவருக்கு கெட்டுப்போன உணவும் புகைபிடிப்பதும் ரொம்ப பிடிக்கும் என்கின்றனர் நீங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்த கெட்டுப்போன உணவை அவர் பக்கம் வீசிவிட்டு நாளடைவில் அவர் கெட்டுப்போன உணவைத்தான் சாப்பிடுவார் என்று சொல்லும் நீங்கள் அல்லவா அழுக்கு மனிதர்கள்


இவ்வளவு மோசமான உணவை சாப்பிட்டுவிட்டு குளிக்காமல் எப்படி இவ்வளவு நாள் வாழமுடிந்ததது என்று அவரது உடலை வைத்து ஆராயப்போகிறாரகளாம்இங்கே இவரைப் போலவே சாக்கடையை ஒட்டி கொசுக்கடிக்கு நடுவில் வாழும் ஒரு இனம் இருக்கிறது அவர்களில் ஒருவர் கூட இந்த கோவிட்டால் பாதிக்கப்படவில்லை, அது போலத்தான் அந்தப் பெரியவரின் உடலும் மனதும் இரும்பாகிப் போயிருக்கிறது, அவரது உடலை ஆராய்வதற்கு முன் அவரது மனதை ஆராயதவர்களே அழுக்கு மனிதர்கள்.


விட்டிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருப்பார் ஆனால் இவரை குளிக்கவைத்தால் என்னவாகிவிடும் என்று அவரை குண்டுகட்டாக துாக்கிச் சென்று ஆற்றில் போட்டு அலசி எடுத்து வேடிக்கை பார்த்த அழுக்கு மனிதர்களால் ஏற்பட்ட பாதிப்பே மரணத்தில் கொண்டு வந்து முடித்துள்ளது..


இப்போது சொல்லுங்கள் அவரா அழுக்கு மனிதர்?


-எல்.முருகராஜ்புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (2)

Bhakt - Chennai,இந்தியா
27-அக்-202222:06:31 IST Report Abuse
Bhakt திராவிஷ மனங்களை விடவா அழுக்கு?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-அக்-202208:54:57 IST Report Abuse
Lion Drsekar மீண்டும் ஒரு மயில்கல்லை பொறித்திருக்கிறார் திரு முருகராஜ் ஐயா அவர்கள், மிக மிக அருமையான கட்டுரை, குளிக்காத மனிதரின் வாழ்க்கையும் குளித்துக்கொண்டுவரும் நம் வாழ்க்கையும் ஒன்றாகவே இருக்கிறது, அவரும் சாக்கடை நீரைத்தான் குடித்து இருக்கிறார், கெட்டுப்போன உணவைத்தான் உண்டிருக்கிறார் , இங்கு நாம் மிகப்பெரிய ஹோட்டல்களில்கூட கெட்டுப்போன உணவை மிக அதிக அளவில் கொடுத்துதான் உண்கிறோம், கோழி, கரி என்று எல்லாமே கலப்படம் , அதைவிட கொடுமை கலப்பட சாராயம் , காய்கனிகள், எல்லாமே உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய இராசயனக் கலவைகள் , பூச்சி மருந்துகளால் கலப்படம் செய்யப்பட்டது, நாம் குளிக்கிறோம் என்ற போர்வையில் தரமற்ற விலை உயர்ந்த தோலுக்கு ஊறுவிளைவிக்க கூடிய இரயாசன பூச்சுகள் மற்றும் ஒவ்வாமைகள், மேலும் ஐயா தாங்கள் இவரை இந்த அளவுக்கு ஆக்கிய சமுதாயத்தையும் இல்லை மறைவு காயாக தந்திருப்பது பாராட்டப்பட வைக்கறது . கெட்டுப்போன பொருளை உண்கிறார் என்பதற்க்காக அதை கொடுத்தே அவரைக் கெடுத்ததை வன்மையாகக் கண்டித்தும் இருக்கிறார், பாராட்டுக்கள் . மொத்தத்தில் உலகம் முழுவதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை அழகாக படம்பிடித்து காட்டியிருப்பது, சிந்திக்கவும் வைக்கிறது . இவரைவிட உள்ளத்தில் அதிக அழுக்கை வைத்திருபப்வர்கள் என்று ஆழமாக சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளது . சிவனெனென்று இருந்தவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று துணி அலசுவது போல் இவரை அலசி குளிக்க வைக்கிறேன் என்ற புரவியில் நாம் எப்படி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தும் மருத்துவமனைக்கு கட்டாயமாக அனுப்பிவைத்து பல சித்திரவதைக்கு உள்ளாகி அணு அணுவாக சாகடிக்கிறோமோ அப்படி சாகடித்து விட்டார்களே ? முடிவாக ஒரு கேள்வியோடு முடித்திருக்கிறார் இப்போது சொல்லுங்கள் அவரா ஆளுக்கு மனிதர் ? என்று முடித்திருக்கிறார் . மொத்தத்தில் குளிக்காமல் வாழ்ந்த அவரும் குளிக்கிறோம் என்ற பெயரில் நாமும் கிட்டத்தட்ட அதே வாழ்வைத்தான் பின்பற்றி வருகிறோம் . அவரை சமுதாயம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு கடைசியில் சாகடித்துவிட்டது , இங்கு தனி மனித வாழ்வு மற்றும் சமுதாய வாழ்வே கலப்படத்தில் வாழ்ந்து உழன்று முடிவில் மருத்துவமனை என்ற இடத்தில ஊசி, மருந்து, மூச்சு , இருதயம், சிற்நநீர்பாதை, குடல் பாதைகள், மலக்குடல் , வாய், தொண்டை , என்று ஒரு இடம் இல்லாமல் எல்லா இடங்களிலும் அந்த அந்த துறை வல்லுநர்கள் பிழைக்காது என்று தெரிந்தும் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் செய்யும் முயற்சியும் , இவரை குளிப்பாட்டிய செயல்பட்டும் அவதிக்கு உள்ளாகும் நோயாளி என்ற பார்வையில் ஒன்றாகத்தான் இருக்கிறது . மொத்தத்தில் அருமையாக உண்மையை வெளிக்கொணர்ந்த ஐயா திரு முருகராஜ் மற்றும் தினமலருக்கு பாராட்டுக்கள் . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X