வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--'கோவை கார் வெடிப்பு சம்பவத்தை, தமிழக அரசியல் கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதற்கு, ஓட்டு வங்கி அரசியலே காரணம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
![]()
|
தீபாவளிக்கு முந்தைய தினம் அதிகாலையில், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில், காவல் துறையினர் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க தேவையான, 75 கிலோ ரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்க, தி.மு.க., அரசு முயற்சிப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கடந்த 2019 ஈஸ்டர் நாளில், இலங்கையில் நடத்தப்பட்டது போல, தீபாவளி நாளில் கோவையில் குண்டு வைப்பது, பயங்கரவாதிகளின் திட்டமாக இருக்கலாம் என, பா.ஜ., தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
அதை தொடர்ந்து, கோவை கார் வெடிப்பு வழக்கை, என்.ஐ.ஏ.,விடம் தமிழக அரசு ஒப்படைக்க உள்ளது. சென்னைக்கு அடுத்து, தமிழகத்தின் முக்கியமான பொருளாதார மையமான கோவையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால், தமிழகத்தின் பொருளாதாரமே சீர்குலைந்திருக்கும்.
ஆனாலும், இந்த விவகாரத்தை ஆளும் தி.மு.க.,வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் போன்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் எந்த பிரச்னை நடந்தாலும், அதற்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மவுனம் சாதித்து வருகின்றனர்.
இதை கடுமையாக கண்டித்துள்ள பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி, ''சிறு பிரச்னைக்கு கூட பக்கம் பக்கமாக அறிக்கை விடும் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.
![]()
|
''முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கோவைக்கு வந்து, நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கை அளிக்கவில்லை. அவர்களுக்கு மக்களின் உயிர்களை விட, சிறுபான்மையினரின் ஓட்டுகள்தான் முக்கியமாகி விட்டது,'' என்றார்.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தி.மு.க., அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், ஓட்டு வங்கி அரசியல் செய்தால், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின், இலங்கைக்கு ஏற்பட்ட நிலை தான் தமிழகத்திற்கும் ஏற்படும். தமிழகத்தில் தொழில் துவங்க யாரும் முன்வர மாட்டார்கள்.
கருப்பு முருகானந்தம், தமிழக பா.ஜ., பொதுச்செயலர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement