கோவை : கோவையில், காரில் காஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கோவை கலெக்டர் கூறுகையில், ''சம்பவம் தொடர்பாக, ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஜமாத் நிர்வாகிகள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
![]()
|
கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''சம்பவத்துக்கு பின், கோவையில், போலீசாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் அமைதியை நிலைநாட்ட, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.
கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் பொது செயலாளர் இனையத்துல்லா கூறுகையில், ''சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், எந்த ஜமாத்திலும், இயக்கத்திலும் அங்கம் வகிக்காதவர்கள்.
மேலும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில், இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாகநாங்கள் அறிகிறோம்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசாருடன் இணைந்து, அனைத்து ஜமாத்துகள் செயல்படும்,'' என்றார்.
எஸ்.பி., பத்ரி நாராயணன், ஆர்.டி.ஓ., இளங்கோ,டி.ஆர்.ஓ., லீலாஅலெக்ஸ் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement