விபத்து அல்லது நோயால் ரத்த நாளங்கள் சேதமடைந்தால், இரண்டு வித சிகிச்சைகள்தான் உண்டு. ஒன்று நோயாளியின் உடலில் வேறு பகுதியிலிருந்து ரத்தக்குழாய்களை எடுத்து ஒட்டுவது. அல்லது, கொடையாளி ஒருவரின் உடலிலிருந்து எடுத்து வைப்பது.
தற்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனித ரத்த நாளத்திளுள்ள 'எலாஸ்டின்' என்ற புரதத்தைப்போலவே செயற்கையாக 'ட்ரோபோஎலாஸ்டின்' என்ற பொருளை உருவாக்கி, அதில் ரத்த நாளங்களை வடிவமைத்துள்ளனர்.
எலிச் சோதனைகளில் இதை, இயற்கை ரத்தநாளங்களைப் போலவே செயற்கை எலாஸ்டின் நாளங்களை எலியின் உடல் ஏற்றுக்கொள்வது தெரியவந்துள்ளது. மனித உடலும் இந்த செயற்கை ரத்த நாளங்களை ஏற்றால், அது சர்க்கரை நோயாளிகளுக்கு வரமாக அமையும். மேலும், விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு, மறுவாழ்வளிக்கவும் உதவும்.