என்னதான் எல்.இ.டி., பிளாஸ்மா, அது, இது என்று வகை வகையான திரைகள் கொண்ட தொலைக்காட்சிகள் வந்தாலும், சில ஆண்டுகளில் அவை குப்பையாகின்றன.
அவை சூழலுக்குக் கேடு என்ற எண்ணம் நுகர்வோரிடையே பரவத் துவங்கியுள்ளது. மாற்றாக, பிரகாசமான படம் காண்பிக்கும் லேசர் புரஜக்டர்களை அத்தகையோர் நாடுகின்றனர்.
எனவே, ஆர்வலர்களுக்காக தனியாக ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்யும் 'கிக்ஸ்டார்ட்டர்' மற்றும் 'இன்டிகோகோ' போன்ற இணையதளங்களில் இத்தகைய லேசர் புரஜக்டர்களுக்கு தனி சந்தை உருவாகியிருக்கிறது.
தி காசிரிஸ் ஏ6 4கே என்ற புரஜக்டர் அந்த வகையை சேர்ந்தது.
லேசர் புரஜக்டர்கள் மிகச் சிறிய கருவிகள் தான். ஒரு மடிக்கணினி அளவிலிருந்து, தீப்பெட்டி அளவு வரை லேசர் புரஜக்டர்கள் வந்து உள்ளன. சுவர் அல்லது, சிறப்புத் திரை மீது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாய்ச்சும் இக்கருவிகளுக்கு மவுசு கூடத் துவங்கியுள்ளது.