கட்டடங்கள், வீடுகளின் கூரைகளின் மேல் வைக்க காற்றாலைகள் ஏற்றவை அல்ல என்ற நிலை வந்துவிட்டது. அவற்றின் விசிறிகள் கண்களை உறுத்தும் வையில் சுற்றியபடியே இருப்பதும், விசிறிகளிலிருந்து வரும் ஓசை கிலி ஏற்படுத்துவதும்தான் காரணம்.
இந்தக் குறைகள் இல்லாத ஒரு காற்றாலையை அமெரிக்காவின் ஹியூஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
'ஏரோமைன்' என்கிற இக்காற்றாலை, சூரிய மின்பலகைகள் அளவுக்கு இடத்தை அடைக்காமல், அவற்றின் விலைக்கே கிடைக்கும் எளிய கருவி என்கின்றனர் இதன் படைப்பாளிகள்.
குறைவான இடத்தை அடைத்தாலும், சற்று அதிக உயரமுள்ள ஏரோமைன், காற்றை உள்வாங்கி, கீழே உள்ள விசிறிக்குத் தருகிறது. துளியும் ஓசையில்லாமல் சுழலும் விசிறி, ஜெனரேட்டரை இயக்கி மின் உற்பத்தி செய்கிறது.
சூரிய ஒளி போல பகலில் மட்டுமல்ல, இரவிலும் உற்பத்தி செய்து, 50 சதவீதம் அதிக மின்சாரத்தை தருகிறது ஏரோமைன் காற்றாலை.