வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'லட்சுமி, விநாயகர் உருவங்களுடன் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க வேண்டும்' என, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
![]()
|
'ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தியின் படத்துடன், லட்சுமி, விநாயகர் படங்களும் இடம்பெற வேண்டும்' என, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ.,வான பா.ஜ., மூத்த தலைவர் ராம் கதம், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
![]()
|
அகண்ட பாரதத்தில், சிறந்த பாரதத்தில், ரூபாய் நோட்டுகளில், சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவர்க்கர், பிரதமர் மோடியின் படங்களே இடம்பெற வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால், நேர்மையான நோக்கத்துடன் தன் கோரிக்கையை வைத்திருந்தால், அது ஏற்கப்பட்டிருக்கும். தேர்தல் நேரத்தின்போது மட்டும் ஹிந்துக் கடவுள்களின் நினைவு, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement