மரக்காணம்,-விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். தி.மு.க., கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலர்.
இவர், நேற்று மதியம் மரக்காணம் சார் பதிவாளர் காமேஷிடம் அடமானத்தில் இருந்த ஒரு பத்திரத்தை பதிவு செய்வது குறித்து பேசியுள்ளார்.
அதற்கு சார் - பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த தி.மு.க., பிரமுகர் முருகன், 10க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்து, சார் - பதிவாளர் காமேஷை ஒருமையில் பேசியுள்ளார்.
இதனால் பத்திரப்பதிவு ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இனியும் தகராறு செய்தால், போலீசில் புகார் கூறுவேன் என, அதிகாரி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அந்த தி.மு.க., நிர்வாகி தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.
இந்த சம்பவத்தால் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.