வாயால் வடை சுடும் மோடி: உதயநிதி 'புது உருட்டு'

Updated : அக் 28, 2022 | Added : அக் 28, 2022 | கருத்துகள் (129) | |
Advertisement
சென்னை: 'பிரதமர் மோடி எப்படி வாயால் வடை சுடுவாரோ, அதேபோல பா.ஜ.,வினர் அனைவரும் வாயால் வடை சுடுவதாக' திமுக எம்எல்ஏ உதயநிதி பேசியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வுமான உதயநிதி பங்கேற்று பேசியதாவது: மழைக்காலம் என்பதால் நிகழ்ச்சியை உள் அரங்கில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால்,
DMK, Udhayanidhi, PM Modi, திமுக, உதயநிதி, பிரதமர் மோடி, வடை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'பிரதமர் மோடி எப்படி வாயால் வடை சுடுவாரோ, அதேபோல பா.ஜ.,வினர் அனைவரும் வாயால் வடை சுடுவதாக' திமுக எம்எல்ஏ உதயநிதி பேசியுள்ளார்.



சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வுமான உதயநிதி பங்கேற்று பேசியதாவது: மழைக்காலம் என்பதால் நிகழ்ச்சியை உள் அரங்கில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.



ஆனால், அமைச்சர் சேகர்பாபு நினைத்தால் மழையை கூட நிறுத்திவிடுகிறார். ஏனெனில் அவர் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனாலும் சொல்கிறேன். மழை பெய்தால் ஒரு இடத்திலும், இல்லையென்றால் இன்னொரு இடத்திலும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.



latest tamil news

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு கேள்வி கேட்டால், அவர் அளிக்கும் பதில்கள் யாராக இருந்தாலும் அசரடித்துவிடும். சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதே என கேட்டதற்கு, எதிர்மறையாக பார்க்காமல், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாக நேர்மறையாக பாருங்கள் என பதிலளித்தார். எப்படிப்பட்ட மத்திய நிதியமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார் பாருங்கள்.



பிரதமர் மோடி எப்படி வாயால் வடை சுடுவாரோ, அதேபோல பா.ஜ.,வினர் அனைவரும் வாயால் வடை சுடுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் 95 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகிறார். அந்த அளவிற்கு பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சித்து கேவலமான அரசியல் செய்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (129)

Narayanan - chennai,இந்தியா
03-நவ-202215:01:48 IST Report Abuse
Narayanan நீங்கள் சுட்ட வடையை முதலில் பாருங்கள்
Rate this:
Cancel
V. Kanagaraj - coimbatore,இந்தியா
02-நவ-202211:13:29 IST Report Abuse
V. Kanagaraj எலெக்ஷனுக்கு முன்னால நீங்க வாயில சுட்ட வடயில நெறய்ய விக்காம கெடக்கு. அந்த வடையை விக்கிறதுக்கு வழியை பாருங்க. அப்புறம் மதத்தை பாப்போம்.
Rate this:
Cancel
kumarkv - chennai,இந்தியா
01-நவ-202215:13:30 IST Report Abuse
kumarkv First complete your schooling before commenting
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X