வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை,-கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அமைப்பின் நிர்வாகிகள், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேற்று சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
![]()
|
இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடந்த சம்பவத்தை, கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
போலீஸ் சோதனையில், ஜமேஷா முபீன் என்பவர் வீட்டில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்திஉள்ளது.
அசம்பாவிதம் நடக்கும் முன்பே துரித நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. வன்முறையாளர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், இஸ்லாமிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது.
![]()
|
கோவையில் பதட்டத்தை தணிக்கவும், இயல்பு நிலையை கொண்டு வரவும், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவும், போலீசாருக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
கடந்த காலங்களை போல, பகுதி வாரியாக அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய போலீஸ் நண்பர்கள் குழு ஏற்படுத்த வேண்டும்.
பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, 'பந்த்' அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement