
சென்னையைச் சேர்ந்த மூத்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர் காந்தாமணி ஒரு சகோதரி போல தோழி போல உள்ளத்தை தொடும்படி அன்பாகவும் வெளிப்படையாகவும் பேசி சிகிச்சை வழங்குபவர், அதிலும் குறிப்பாக மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் கல்வி கனவை நனவாக்கும் கண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்து வருபவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சூரிய கிரகணத்தின் போது அவர் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சேர்த்து ஒரு விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டு இருந்தார் அந்த அறிக்கையில் சூரிய கிரகணத்தின் போது மட்டுமின்றி வாழ்நாள் முழுவதுமே கண்களை பாராமரிக்க தேவையான நல்ல பல உபயோகமான டிப்ஸ்கள் இருந்தன

அவைகளில் சிலவற்றை பார்க்கலாம்..
குழந்தைகள் கண் தொடர்பாக எது சொன்னாலும் காது கொடுத்து உடனே கேட்கவேண்டும், பள்ளிக்கூடத்தில் போர்டு சரியா தெரியமாட்டேன் என்றாலும்,கண் சிமிட்டும் போது வலிக்கிறது என்றாலும் ,பொருட்களை புத்தகத்தை மிக பக்கத்தில் வைத்து பார்ப்பது படிப்பது போன்ற இயல்புக்கு மாறான விஷயங்கள் நடந்தாலும் உடனே குழந்தையை கண் மருத்துமரிடம் அழைத்துச் செல்லவும் எல்லா பிரச்னையையும் இப்போது சமாளிக்க, முடியும் சரி செய்யமுடியும் ஆனால் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் தாமதம் மட்டுமே அதிக பிரச்னையில் கொண்டு போய்விடும் என்பதை நினைவில் வைக்கவும்.
இரவில் வாகனம் ஒட்டும்போது எதிர்வரும் வாகனத்தில் இருந்து வரும் வெளிச்சம் கண்களை மிகவும் கூசச்செய்கிறதா? கண்களில் ஏதேனும் மாற்றமாக உணர்கிறீர்களா? எந்த வயதாக இருந்தாலும் இந்த பிரச்னை இருந்தால் உடனே மருத்துவரை அணுகலாம்.
மழைக்காலம் வந்துவிட்டால் மெட்ராஸ் ஐ என்று சொல்லக்கூடிய கண் சிவந்து எரிச்சல் தரும் நோய் வந்துவிடும் இது பலரும் நினைப்பது போல பாதிக்கப்பட்டவரின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதால் வருவது கிடையாது பாதிக்கப்பட்டவர் தொட்ட பொருட்கள் தெரிந்தோ தெரியாமலோ உபயோகிக்கும் போதுதான் அது ஒரு தொற்றாக மற்றவர்களுக்கும் பரவும்
டிஜிட்டல் ஸ்கிரீன் சிண்ட்ரோம் என்பது மொபைல் போன், லேப் டாப், டிவி, ஐ பேட், கம்ப்யூட்டர்கள் போன்ற திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால் வரக்கூடிய பிரச்னை.இதனால் கண்கள் வறட்சியாகி கண் வலியை உண்டாக்கும்.இதை எல்லாம் பார்க்கவேண்டாம் என்று சொன்னால் அது பத்தாம் பசலித்தனமாக இருக்கும் குறைத்துக் கொள்ளலாம் குறிப்பாக துாங்குவதற்கு ஓரு மணி நேரத்திற்கு முன் இவற்றில் இருந்து கண்களுக்கு ஒய்வு கொடுக்கலாம்.தவிர .
நம் கண்களின் மேற்பரப்பு அடுக்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஒளியியல் தெளிவைக் கொடுக்க, நம் கண்களுக்குள் இயற்கையான கண்ணீரின் சுழற்சியை எளிதாக்க ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் சிமிட்டுவதன் மூலம் நாம் நம்மை அறியாமலே நமது கண்களை ஈரப்பதமாக்கி பாதுகாக்கிறோம் ஆகவே கண்சிமிட்டுவதை விட்டவிடாதீர்ள் கூடுதலாக ஒவ்வாரு 20 நிமிடங்களுக்கும் ஒரு தொலைதூரப் பொருளை 20 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக உற்றுப் பாருங்கள் அது கண் சோர்வை தடுக்கும். ஏர் கண்டிஷனின் இருந்து வெளிவரும் குளிர்காற்றை கண்கள் நேரடியாக எதிர்கொள்வதை தவிர்க்கவும் அது அதிகளவு சோர்வைக் கொடுக்கும்..கண்களை வலுப்படுத்த புரதச்சத்துள்ள உணவைக் கொடுக்கவும்.
கண்ணாடி அணிபவர்கள் எப்போதும் இரண்டு கண்ணாடிகள் வைத்துக் கொள்ளுங்கள் கண்ணாடி சேதமடைந்தால் உடனே சரிசெய்து கொள்ளுங்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை சரியாக கையாளவும் .கண்ணாடி மற்றும் காண்டாக்ட் லென்ஸ்களுக்கு மாற்றுத்தீர்வு வந்துவிட்டது.உங்கள் கண் மருத்துவரை கேட்டால் விரிவாக சொல்வார்.
கண்புரை நீக்கம் என்பது இப்போது எளிமையான சிகிச்சையாகிவிட்டது சிகிச்சை முடிந்த மூன்று மணி நேரத்தில் ஒருவர் மீண்டும் தன் வேலைக்கு திரும்பலாம். நோயாளி தாங்களாகவே சொட்டுகளை ஊற்றலாம். அவர்கள் எந்தப் பக்கத்திலும் தூங்கலாம், டிவி பார்க்கலாம், சமைக்கலாம், நடக்கலாம். மருத்துவமனையில் தங்குவது குறைந்தபட்சம். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்தான்..
கண்களுக்கு பிரச்னை வந்தால்தான் கண் மருத்துவரை பார்க்கவேண்டும் என்பதில்லை கண்களுக்கு பிரச்னையே வராமலிருக்க அவ்வப்போது கண் மருத்துவரை சந்தித்து சோதித்துக் கொள்ளலாம்.
விலைமதிப்பற்ற பார்வை எப்போதும் உங்கள் கைகளில் உள்ளது என்பதை மட்டும் நினைவில் கொள்க.
டாக்டர் பி.காந்தாமணி
95000 40702
kanthask2020@gmail.com