வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் மிகவும் 'பவர்புல்' நபர். ஆனால், சமீபகாலமாக இவருக்கும், கட்சிக்கும் ஏதோ பிரச்னை போலிருக்கிறது. சந்திரசேகர ராவ், தன் கட்சியை தேசிய கட்சியாக அறிவிக்க, ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் கவிதா பங்கேற்கவில்லை.
![]()
|
அடுத்து, தெலுங்கானாவில் சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு தொகுதியின் பொறுப்பாளர் பட்டியலிலும் கவிதாவின் பெயர் இல்லை. இதையடுத்து, குடும்பத்தில் ஏதும் குழப்பமா என கட்சி தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வட்டாரத்தில் ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது, கவிதா ஒரு முக்கிய தி.மு.க., பிரமுகருடன் அடிக்கடி பேசி வருகிறாராம். இவர் உதவியுடன் கவிதா பல திட்டங்களை தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
![]() |
'இவர் கவிதாவுடனும், குமாரசாமியுடனும் ஏன் பேசுகிறார், என்ன பேசுகிறார்; எதற்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை; ஒரு வேளை கட்சியிலிருந்து வெளியேற திட்டம் தீட்டுகிறாரா?' என கட்சியின் சீனியர் தலைவர்கள் சந்தேகிக்கின்றனர். இது, தி.மு.க., தலைமையையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.