கோடநாடு கொலையில் தடயங்கள் அழிப்பு:  சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்
கோடநாடு கொலையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்

கோடநாடு கொலையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்

Updated : அக் 30, 2022 | Added : அக் 30, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
ஊட்டி-கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.ஒப்படைப்பு ஜெ., மறைவுக்கு பின், 2017 ஏப்., 24ல், எஸ்டேட்டில் நுழைந்த கொள்ளையர், காவலாளி

ஊட்டி-கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.latest tamil news


நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.


ஒப்படைப்பு


ஜெ., மறைவுக்கு பின், 2017 ஏப்., 24ல், எஸ்டேட்டில் நுழைந்த கொள்ளையர், காவலாளி ஓம்பகதுாரை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டனர்.

காவலாளி ஓம்பகதுார் உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த, 30ம் தேதி இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியதை அடுத்து, இவ்வழக்கின், 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி., குழுவில், டி.ஜி.பி., முகமது ஷகில் அக்தர்,ஐ.ஜி., தேன்மொழி, கூடுதல் எஸ்.பி., முருகவேல், டி.எஸ்.பி.,க்கள் அண்ணாதுரை, சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்று உள்ளனர்.

இக்குழுவினர் கடந்த 26ம் தேதி கோடநாடு எஸ்டேட்டில், இரண்டு மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

காவலாளி ஓம்பகதுாரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம், வெட்டி அகற்றப்பட்டுள்ளது, சி.பி.சி.ஐ.டி., ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சில பகுதிகளிலும், தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.


நேபாளத்தில் விசாரணை


கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்து, தற்போது நேபாளத்தில் வசித்து வரும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபாவிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


latest tamil news


இதற்காக போலீசார்நேபாளம் செல்ல உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டு ஜாமினில் உள்ள, 12 பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டிருப்பதால், கோடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

'மரம் வெட்டியது குறித்து விசாரணை'

ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோடநாடு எஸ்டேட் சென்று, அங்கு கொலை, கொள்ளை நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ''காவலாளி ஓம்பகதுார் உடலை தலைகீழாக கட்டிவைத்திருந்த மரத்தை வெட்டி, அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை எஸ்டேட் நிர்வாகம் நடவு செய்துள்ளது. மரம் வெட்டி அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (12)

duruvasar - indraprastham,இந்தியா
30-அக்-202212:15:39 IST Report Abuse
duruvasar தமிழ்நாட்டில் தடயங்களை அழிக்கும் வேலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
30-அக்-202211:01:41 IST Report Abuse
Tamilan கூட்டு சதியாக இருக்கலாம் .
Rate this:
Cancel
விசு அய்யர் - Chennai ,இந்தியா
30-அக்-202210:51:03 IST Report Abuse
விசு அய்யர் அழித்த பிறகு அழித்து விட்டார்கள் என்று சொல்வதால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள் என்பது புரிகிறது.. இனி அவர்களே முதல்வராகவும் தேர்தலில் நிற்க வாய்ப்பு இருக்கிறது என்பது தமிழக மக்களுக்கு புரியாமளா இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X