வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--''தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக்கின் மன்னிப் பை ஏற்கவில்லை; முதல்வர் ஸ்டாலின் எனக்காக குரல் கொடுப்பார் என காத்திருக்கிறேன்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
![]()
|
சமீபத்தில், சென்னை ஆர்.கே.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில், தி.மு.க., தலைமைக் கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசினார்.
அப்போது, பா.ஜ.,வில் உள்ள நடிகையர் குஷ்பு, நமிதா, கவுதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்தார்.
இந்த வீடியோ காட்சி, சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சைதை சாதிக்கின் பேச்சுக்காக, குஷ்புவிடம், தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி, சமூக வலைதளம் வாயிலாக மன்னிப்பு கேட்டார். அதைத் தொடர்ந்து, சைதை சாதிக்கும் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், சென்னையில் குஷ்பு அளித்த பேட்டி:
என்னை அவதுாறாக பேசிய தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக்கின் மன்னிப்பை நான் ஏற்க வில்லை. அவர்கள் என்னை அவமானப் படுத்தவில்லை; தங்கள் குடும்ப பெண்களை அவமானப்படுத்துகின்றனர்.
![]()
|
எனக்காக குரல் கொடுத்த கனிமொழியை பாராட்டுகிறேன். அவர், பெண்களையும், பெண்களின் பேச்சு சுதந்திரத்தையும் எப்போதும் ஆதரிப்பவர்.
மற்ற பெண்களை பற்றி, இதுபோல அவதுாறாக இனி யாரும் பேசாமல் இருக்க, எனக்காக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுப்பார் என காத்திருக்கிறேன்.
முதல்வர் இந்த விஷயத்தில் சிறந்த முன் உதாரணமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement