வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாவ்நகர்-''பொது சிவில் சட்டம் தேவை தான். ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ., ஏமாற்றுகிறது,'' என, புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
![]()
|
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
பொது சிவில் சட்டம் தேவை தான். அரசியல் சாசனத்தின் 44வது பிரிவு, இதை அமல்படுத்தும் பொறுப்பு மாநிலங்களுக்கு உள்ளது என்று கூறுகிறது. அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி இதை செயல்படுத்த வேண்டும்.
குஜராத் சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை அமைப்பதாக பா.ஜ., அரசு கூறியுள்ளது.
![]()
|
உத்தரகண்டிலும் தேர்தல் நடப்பதற்கு முன் இவ்வாறு கூறினர். தேர்தலில் வென்ற பின் மறந்து விட்டனர். பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் ஏன் இதை செயல்படுத்தவில்லை?
நாடு முழுதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக ஏன் கூறவில்லை? லோக்சபாவுக்கு தேர்தல் வரும் நேரத்தில், இதற்கான அறிவிப்பை பா.ஜ., வெளியிடுமா?
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement