வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து, தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
![]()
|
நாடு முழுதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, கடந்த 27 நாட்களாக, நாள் ஒன்றுக்கு 3,000க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. உயிரிழப்புகளும் 10க்கும் குறைவாகவே உள்ளது.
கொரோனா பரவலின் தற்போதைய நிலை குறித்து புதுடில்லி மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
வழக்கமான, 'ப்ளூ' காய்ச்சலின் அறிகுறியும் கொரோனா அறிகுறியை போல தான் உள்ளது. ப்ளூ காய்ச்சலுக்காக மருத்துவமனை வருபவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கொரேனாவால் பாதிக்கப்படுவோருக்கு மிக லேசான அறிகுறிகளே உள்ளன.
![]()
|
முன் இருந்ததை போல, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாவது இல்லை. அதே நேரம், முதியோர் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட துவங்கிவிட்டோம். தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், வைரஸ் உருமாற்றம் அடைவது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அச்சப்பட தேவையில்லை. அதன் தீவிர தன்மை குறித்த ஆராய்ச்சிகள் மட்டும் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement