ஹிந்து, முஸ்லிம் என பிரித்து பார்க்க கூடாது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை

Updated : அக் 31, 2022 | Added : அக் 31, 2022 | கருத்துகள் (82) | |
Advertisement
கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை இன்று(அக்.,31) சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அவர் ஏராளமான பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினார்.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வருவதை முன்னிட்டு, கோவை சாய்பாபா கோவில் விசாலாட்சி குழுவினரின் பஜனை குழுவினர் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாஜ., தலைவர்

கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை இன்று(அக்.,31) சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அவர் ஏராளமான பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினார்.
latest tamil news


கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வருவதை முன்னிட்டு, கோவை சாய்பாபா கோவில் விசாலாட்சி குழுவினரின் பஜனை குழுவினர் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஈஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.இதையடுத்து, கந்த சஷ்டி பாராயணம் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நடந்தது. பாஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஏராளமான பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.latest tamil newsபாதுகாப்பு:


கோட்டைமேடு பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வாகன போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.இதையடுத்து, பாஜ., மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:


ஹிந்து. முஸ்லிம் என பிரித்து பார்க்க கூடாது. அதேபோல் கோவையில் எந்த மதத்தினரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. கோவை மக்கள் மதவேறுபாடின்றி அமைதி காத்தனர். தமிழக அரசே தொந்தரவு செய்வது நோக்கமல்ல.பா.ஜ., வினர் எதிரானவர் அல்ல:


எந்த மதத்திற்கும் பா.ஜ., வினர் எதிரானவர் கிடையாது.கோட்டை ஈஸ்வரன் கோயிலில் ஒரு குண்டா அல்லது இரண்டு குண்டு வெ டித்ததா என்று தெரியவில்லை. ஆனால் வெடிகுண்டு என்பது தெரிந்ததும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தது.பால்ரஸ் குண்டு, ஆணி:


சிலிண்டர் விபத்து என தற்போதும் கூறிவருவது ஏன்?. தீவிரவாத தாக்குதல் என கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்தவே கூறுவது ஆகும். குற்றவாளிகளை ஒரு மதத்தை சேர்ந்தவர் என கூறவில்லை. ஐ.எஸ். கொள்கை தவறு என இஸ்லாமிய குருமார்களே கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.மன்னிப்பு கேட்க முடியாது

செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சில செய்தியாளர்கள் கோரினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, 'மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீத செய்தியாளர்கள் உள்ளனர்.நான் மன்னிப்பு கேட்கவே முடியாது. மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே இல்லை. தவறே செய்யாதபோது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அனைத்து செய்தியாளர்களையும் பொதுவாக நான் விமர்சிக்கவில்லை. நான் தவறு செய்ததாக நினைத்தால் என் பேட்டியை புறக்கணிக்கலாம். அதற்கு செய்தியாளர்களுக்கு உரிமை இருக்கிறது' என காட்டமாக பதிலளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (82)

31-அக்-202222:27:35 IST Report Abuse
சிந்தனை இப்படி சொன்னால்தான் புரியும்..
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
31-அக்-202220:34:23 IST Report Abuse
balakrishnan அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலம் .
Rate this:
Cancel
beindian - doha,கத்தார்
31-அக்-202220:10:22 IST Report Abuse
beindian பிரித்து நீங்கள் பார்த்ததில்தானே இன்றளவும் மாட்டிறைச்சிக்காக கொல்லப்பட்டுகொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
31-அக்-202220:20:55 IST Report Abuse
Shekarஅடுத்தவர்களின் மாட்டை திருடி தின்றால்...., ஓசியில் தின்ன பன்றிகள் தெருவில் திரிகின்றன அவைகளை சாப்பிடவேண்டியதுதானே...
Rate this:
beindian - doha,கத்தார்
31-அக்-202220:44:40 IST Report Abuse
beindianITHEY...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
01-நவ-202200:01:59 IST Report Abuse
சாண்டில்யன்ஓனர்கள் உண்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X