வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத் கேபிள் பாலம் சரிந்து விழுந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பாரம் தாங்காமல் ஆற்றில் சரிந்து விழுந்தில் 140-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நடந்த சம்பவம் குறித்து பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங். எம்.பி., ராகுலிடம் கேட்டதற்கு, அவர் அளித்த பதில், நடந்த சோக சம்பவம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
![]()
|
இன்னும் சொல்ல போனால் இதனை அரசியலாக்கவிரும்பவில்லை. அப்படி செய்தால், பலியானர்களை அவமதிக்கும் செயல் ஆகிவிடும். எனவே இதனை அரசியலாக்க வேண்டாம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.