
திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாச்சார மையத்துடன் இணைந்து தட்சின்சித்ரா 'வானம்' - தலித் கலை, இலக்கியம் மற்றும் நாடக விழாவைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த திறமையானவர்களைக் கொண்டாடும் உரைகள், குழு விவாதங்கள், ஆவணப்படத் திரையிடல்கள், நாடகம் மற்றும் கலைக் கண்காட்சிகள்
ஒவியங்கள் புத்தக கண்காட்சி இடம் பெற்றன.சமூகத்தை ஆட்டிப்படைக்கும் சமூக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் சிந்தனையுடன் கூடிய குறு நாடகத்தை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.

சமூகத்தில் சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், தலித் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி வாரிஜா மற்றும் காதம்பரி கலைக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன, இந்த நவம்பர் மாதம் 8 ம்தேதி வரை கண்காட்சியில் உள்ள ஒவியங்களை மக்கள் பார்வையிடலாம்.

lநிகழ்ச்சி ஏற்பாடுகள் தட்சின்சித்ரா இயக்குனர் டெபேரா தியாகராஜன்.ஒருங்கிணைப்பு கீதா,படங்கள் ரேகா
