உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
'நம் நாடு செல்வச் செழிப்பில் மென்மேலும் உயர வேண்டும் எனில், இனிமேல் ஹிந்து கடவுள்களான விநாயகர், லட்சுமி படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும்' என்ற, விபரீதமான யோசனையை தெரிவித்துள்ளார். அதற்கு உதாரணமாக, இந்தோனேஷியா நாட்டில் புழக்கத்தில் இருக்கும், ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் இடம் பெற்றிருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

கெஜ்ரிவால் கூறும் யோசனையை, அவரின் நண்பரான ஸ்டாலினும், அவருடன் நட்பு பாராட்டும் போலி பகுத்தறிவாளர்களும், கம்யூ., தோழர்களும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. விநாயகர் பிறப்பையே இழித்தும் பழித்தும் பேசும் திராவிட செம்மல்கள், ரூபாய் நோட்டில் அந்தக் கடவுளின் படத்தை அச்சிட அனுமதிப்பரா?
'அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை, சமூக நீதிக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச்சார்பின்மைக்கு எதிரானது' என்று திருமாவளவன், வீரமணி, வைகோ மற்றும் கம்யூ., தோழர்கள் விரைவில் கண்டன மழை பொழிவர்.
இல்லையெனில், 'மஹாத்மா காந்திக்கு எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல அம்பேத்கர்; எனவே, அவரது படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டு வெளியிடுவதே, உத்தமமான செயலாகும்' என்று, வியாக்கியானம் பேசுவர்.
ரூபாய் நோட்டுகளில், ஒருவரின் படம் இடம் பெற வேண்டும் எனில், அவருக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று, அரசியல் சட்டத்தில் விதிமுறைகள் ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை. மஹாத்மா காந்தி எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்பதாலும், தேசப்பிதா என்பதாலும், அவரது உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட, மத்திய அரசு முடிவு செய்தது.
காந்தி படம் இடம் பெற்றது, இதுவரை சர்ச்சையாகவில்லை. இப்போது, உருப்படாத யோசனை ஒன்றைச் சொல்லி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார், கெஜ்ரிவால். அவரின் யோசனையை ஏற்றால், ஒவ்வொரு பிரிவினரும், கட்சியினரும் தங்களது தலைவர்களின் படங்கள், ரூபாய் நோட்டுகளில் இடம் பெற வேண்டும் என, கோரிக்கை விடுக்கத் துவங்கி விடுவர்.
அது, போகாத ஊருக்கு வழி சொல்லும் கதையாகி விடும். எனவே, கெஜ்ரிவாலின் இந்த அரைவேக்காடுத்தனமான யோசனையை, மத்திய அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புறந்தள்ளுவதே சரியானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement