செம்பரம்பாக்கம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.,2) பிற்பகல் திறக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஏரியை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரி திறப்பை முன்னிட்டு, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement