சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முடிவுக்கு வரும் முடிப் பிரச்னை!

Added : நவ 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தலை முடி உதிர்வதும், வழுக்கையாவதும் இரு தலையாய பிரச்னைகள். தலைமுடி எப்படி வளர்கிறது என்பதையும், முடியின் வேர்க் கால்கள் எப்படி முளைக்கின்றன என்பதையும் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர்.அண்மையில் ஜப்பானின் யோகோஹாமா தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு படி மேலே போய், முடியின் வேர்க்கால்களை ஆய்வகத்திலேயே வளர்க்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இந்த
Hair, Scientists, Japan, தலைமுடி, விஞ்ஞானிகள், ஜப்பான், வழுக்கை, யோகோஹாமா விஞ்ஞானிகள், yokohama scientists,

தலை முடி உதிர்வதும், வழுக்கையாவதும் இரு தலையாய பிரச்னைகள். தலைமுடி எப்படி வளர்கிறது என்பதையும், முடியின் வேர்க் கால்கள் எப்படி முளைக்கின்றன என்பதையும் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர்.

அண்மையில் ஜப்பானின் யோகோஹாமா தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு படி மேலே போய், முடியின் வேர்க்கால்களை ஆய்வகத்திலேயே வளர்க்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இந்த வெற்றி எலியின் முடியை வளர்ப்பதில்தான். என்றாலும், எலியின் பன்முக ஸ்டெம் செல்களை எடுத்து, அவற்றை முடிக்கான செல்களாக்கி, பிறகு அவற்றை சற்று நீளமான முடியாக வளர்த்தெடுக்க ஜப்பானிய விஞ்ஞானிகளால் முடிந்திருக்கிறது.

இந்த ஆய்வை வைத்தே, முடி எப்படி வளர்கிறது, வழுக்கை எப்படி உண்டாகிறது என்பதை ஆராய முடியும். அதேபோல, புதிய முடி வேர்க்கால்கள் வளர்வதற்கு தேவையான ஊக்க மருந்துகளையும் கண்டறிய முடியும். அடுத்த கட்டமாக, மனித முடியினை ஆய்வகத்தில் வைத்து வளர்க்கும் முயற்சியில் யோகோஹாமா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

Venkata Krishnan - Toronto ,கனடா
08-நவ-202218:17:03 IST Report Abuse
Venkata Krishnan இதைப்போன்ற செய்திகள் குப்பைக்கூடைக்குக்கட தகுதியற்றவை.
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
09-நவ-202212:23:21 IST Report Abuse
பெரிய ராசு முடியில்லாதவனுக்கு அத்தகவலை தெரியும்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X