தாவரங்கள் பெரிதாக, உறுதியாக வளர, ஒளி தேவை. குறிப்பாக சூரிய ஒளிக் கதிரில் இருக்கும் ஏழு வண்ணங்களில், சிவப்பு மற்றும் நீல வண்ண ஒளிகள் மிக அசியம்.
அதற்கென்றே, ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு பிளாஸ்டிக் தாளை தயாரித்துள்ளனர். வழக்கமான ஒளி புகும் பிளாஸ்டிக் தாளின் மீது, யூரோபியம் என்ற அரிய உலோகப் பூச்சினை விஞ்ஞானிகள் பூசினர். இந்த தாளினை, பயிர்களின் மேல் வைத்துவிடவேண்டும்.
இதன் ஊடாக வந்து வெளிப்படும் நேரடி சூரிய ஒளியிலுள்ள, புற ஊதாக்கதிர்களை, கண்ணுக்குப் புலப்படும் சிவப்பு ஒளியாக மாற்றுகிறது. சோதனைகளின் போது, கோடையில் தாவரங்களின் மேல் யூரோப்பா பூச்சுள்ள காகித ஒளியால் ஏற்பட்ட தாக்கம் தெரியவில்லை.
ஆனால், குறைவான வெளிச்சம் இருக்கும் குளிர்காலத்தில், இந்தக் காகிதத்தின் வழியே வரும் சிவப்பு ஒளியால், தாவரங்கள் 1.2 மடங்கு கூடுதல் உயரமும், 1.4 மடங்கு கூடுதல் எடையும் இருந்தன.
நீண்ட குளிர்காலத்தைக் கொண்டபகுதிகளில், விவசாயத்திற்கு யூரோப்பா காகிதத்தை பயன்படுத்தினால், கூடுதல் உணவுஉற்பத்தியை செய்ய முடியும்.