
குங்குமப்பூ என்றால் அது சமையலுக்கு சுவை சேர்க்கும் பொருள் என்பது போய் அதை பாலில் கலந்து கர்ப்பினிகள் குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல கலராக பிறக்கும் என்ற நம்பிக்கையே பிரதானமாக விளங்குகிறது.

உற்பத்தியில் உலக சந்தையில் ஈரானிய குங்குமப்பூ முதலிடத்தில் இருந்தாலும் தரத்தில் காஷ்மீர் குங்குமப்பூவே பல ஆண்டுகாலமாக முதலிடம் வகிக்கிறது காரணம் அது வளரும் தட்பவெட்ட சூழ்நிலையும் அதன் குணாதிசயங்களும் அதில் உள்ள செறிவான சூழ்களும்தான்.

இதன் காரணமாக இது உற்பத்தியாகும் காஷ்மீரிலேயே இதன் விலை பத்து கிராம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.இருந்தும் எப்படி நம் நாட்டில் உள்ள எல்லா பொருட்களுக்கும் சீனப்பொருட்கள் போட்டியாக முளைத்துள்ளனவோ அதுபோல காஷ்மீர் குங்குமப்பூவிற்கு போட்டியாக மறைமுகமாக கொண்டுவரப்படும் ஈரானிய குங்குப்பூ விளங்குகிறது.

இருந்தும் அதை எல்லாம் முறியடித்து காஷ்மீர் குங்குமப்பூ நாடு முழுவது பயணித்து வருகிறது காரணம் குரோஸின் அதிக அடர்த்தியோடு இருப்பதால். காஷ்மீர் குங்குமப்பூவில் குரோசின் உள்ளடக்கம் 6.82% என்ற அளவில் ஒப்பிடும்போது காஷ்மீர் குங்குமப்பூவில் அது 8.72% என்றளவில் உள்ளது.

தற்போது குங்குமப்பூ மற்றும் விதை மசாலாப் பொருட்களுக்கான ஆராய்ச்சி நிலையத்தில் ,புதிய தொழில் நுட்பத்தில் குங்குமப்பூவை வளர்ப்பதற்கான முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள், இந்த வெற்றி சாதாரண விவசாயிகளுக்கும் போய்ச்சேரும் போது காஷ்மீர் குங்குமப்பூவின் உற்பத்தி அதிகரிக்கும் விலை குறையும் விவசாயிகளும் பொதுமக்களும் பயன்பெறுவர்.