வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலுங்கானாவில் 'பாரத் ஜோடோ ' யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'பாரத்ஜோடோ யாத்திரை' நடத்தி வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தாண்டி தெலுங்கானாவில் இந்த யாத்திரை நுழைந்துள்ளது.
இந்த யாத்திரையின் 57 வது நாளில் தெலுங்கானாவின் பாரம்பரிய பொனாலு திருவிழாவில் ராகுல் கலந்து கொண்டார். பழங்குடி மக்கள் தங்களை தாங்களே சாட்டையால் அடிதது கொள்ளும் பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்ட ராகுல், கனமான கயிற்றை எடுத்து கொண்டு தன்னை தானே அடித்து கொண்டார். இதனை தொடர்ந்து மேள தாளங்களுடன் அங்கிருந்த பழங்குடி மக்களுடன் இணைந்து நடனமாடினார்.