
என் பெயர் ஷபிக் கான், மெக்கானிக்கல் இன்ஜினியர்.தொழில் நிமித்தமாக எந்திரங்களுடன் பழகிப் பழகி மனமும் எந்திரமாகிப் போயிருந்தது,இதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று எண்ணிய போது புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டேன்,புகைப்படம் எடுக்க எடுக்க மனது உற்சாகமும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இப்போது எந்திரங்களுடன் இருந்தாலும் எடுத்த, எடுக்கப்போகும் படங்களை நினைத்து மனது சந்தோஷமாகவே இருக்கிறது.

ஆரம்பத்தில் இயற்கை காட்சிகளை படம் எடுத்துக் கொண்டிருந்த நான் கோயில் மற்றும் கட்டிடக் கலைகளின் மீது ஆர்வம் ஏற்பட இப்போது அது தொடர்பான படங்களை எடுத்து வருகிறேன் இப்போது என் ஆன்மா இன்னும் திருப்தியாக இருப்பதை உணர்கிறேன் அதே நேரம் தெருக்காட்சிகளையும் மக்களையும் ரசித்து எடுத்து வருகிறேன் எனது படங்களை பார்ப்பவர்கள் எனது ரசனையை பாராட்டி வருகின்றனர் இது எனக்கு கூடுதல் உற்சாகம் தருவதால் எனது புகைப்பட பயணத்தை இனிதே தொடர்கிறேன் என்ற சுய அறிமுகத்துடன் சில படங்களை வளர்ந்துவரும் சிறந்த பெண் புகைப்படக்கலைஞரான தட்சின்சித்ரா ரேகாவின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.

அந்தப் படங்களைப் பார்த்த ரேகா, படங்களை பார்த்து வியந்து பாராட்டியதோடு இவரைப் போன்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தும் தினமலர் இணையத்தின் பொக்கிஷம் பகுதியில் வந்தால் சம்பந்தப்பட்ட ஷபிக் கான் இன்னும் உற்சாகமும் உவகையும் கைவரப்பெற்று நிறயை படங்கள் எடுப்பாரே என்ற மனித நேயத்தோடு பொக்கிஷம் பகுதிக்கு அனுப்பியிருந்தார்.

ஷபிக் கான் படங்கள் ஒரு தனி ஆவர்த்தனமாக தனித்தன்மையோடு விளங்குகிறது அவரது புகைப்பட பயணம் தொடரட்டும் வாழ்த்துகள், வாழ்த்த நினைப்பவர்களுக்காக அவரது எண்:94427 74887.



-எல்.முருகராஜ்