சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்திய பிரியா என்ற கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு காரணமான சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபிசிஐடி போலீசாரின் பரிந்துரையை ஏற்று சதீஷை குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.