ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும்: 5ல் 3 நீதிபதிகள் ஆதரவு தீர்ப்பு

Updated : நவ 10, 2022 | Added : நவ 07, 2022 | கருத்துகள் (103) | |
Advertisement
புதுடில்லி: ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீடு செல்லும் எனவும், இரு நீதிபதிகள் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச
10% EWS, EWS reservation, Supreme Court, General Category, Four Judges, Agree, பொருளாதாரம், உயர் வகுப்பினர், இட ஒதுக்கீடு, தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி: ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீடு செல்லும் எனவும், இரு நீதிபதிகள் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. குறிப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு முறை என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை அமைவதாக கூறி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.latest tamil news

இந்நிலையில் இன்று (நவ.,7) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த அமர்வில் உள்ள நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர். அதில் தினேஷ் மகேஸ்வரி, பீலா திரிவேதி, பர்திவாலா ஆகிய 3 நீதிபதிகள் ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், ரவீந்திர பட் ஆகியோர் இதற்கு எதிரான என தீர்ப்பை அளித்தனர்.latest tamil news


3 நீதிபதிகளின் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: 50 சதவீத உச்ச வரம்பு என்பதை 10 சதவீத இடஒதுக்கீடு இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு, அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. 10 சதவீத இடஒதுக்கீடு என்பது சமத்துவத்திற்கு எதிரானதாக அமையவில்லை. எனவே ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். இவ்வாறு தீர்ப்பளித்தனர்.நீதிபதி ரவீந்திர பட் அளித்த தீர்ப்பில், '10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே இந்த இடஒதுக்கீடு செல்லாது' என தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தரப்பும் அதே தீர்ப்பை அளித்தார். இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என ஆதரவாகவும், இரு நீதிபதிகள் மட்டும் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (103)

muthu - tirunelveli,இந்தியா
09-நவ-202211:26:07 IST Report Abuse
muthu How can be a poor upper e . I DID NOT SEE UPPERE POOR IN TAMILNADU , ALL ARE IN GOOD POSITION BY GETTING GOOD EDUCATION AND SENDING THEIR CHILDREN FOR FOREIGN COUNTRY FOR FURTHER HIGHER STUDIES. EWS QUOTA SHALL BE REAL POOR COVERING ALL ES , NOT ON PARTICULAR ES. LET US MODIFY TO SUIT REAL POOR GETS THIS
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
07-நவ-202222:39:18 IST Report Abuse
jagan எதிராக தீர்ப்பளித்தது பட் ...பட் ஒரு காஷ்மீர் முதல் கர்நாடக வரை ப்ராமண பிரிவு
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
07-நவ-202221:54:03 IST Report Abuse
vbs manian darmam nyayam innum sagavillai.nandri.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X