சென்னை: தமிழகத்தில் நேற்று, கொரோனா தொற்றால் 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடு மற்றும் மருத்துவமனையில், 1,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில், நேற்று 8,274 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையில் 29: செங்கல்பட்டில், 11; சேலத்தில் 9; கோவையில், 7; திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நான்கு பேர் உட்பட, மாநிலம் முழுதும், 114 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்றவர்களில் நேற்று, 1,982 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனை மற்றும் வீடுகளில், 1,055 பேர் சிகிச்சையில் உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.