சென்னை: தட்டச்சு தேர்வு நாளில் வேறு முக்கிய தேர்விருந்தால், நாளைக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என, தமிழக தொழில்நுட்ப கல்வி துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தொழில்நுட்ப கல்வி துறை தலைவர் லட்சுமிபிரியா வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக தொழில்நுட்ப கல்வி துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும் வணிகவியல் பயிலகங்களில் பயிற்சி பெறுவோருக்கு வரும், 12, 13ம் தேதிகளில், தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் உள்பட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், மேற்கண்ட தேதிகளில், பருவ தேர்வுகள் உள்பட வேறு முக்கிய அரசு தேர்வுகள் எழுத வேண்டியிருந்தால், அதற்குரிய ஆவணங்களுடன் தெரிவிக்கலாம். வணிகவியல் பயிலகங்களும், இதுதொடர்பான விபரங்களை நாளைக்குள், gteaug22@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.