புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் அருகே ஆர்.புதுப்பட்டணம் கிராமத்தில் மீனவர் வலையில் வெடிப்பொருள் சிக்கியது .
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே ஆர்.புதுப்பட்டிணம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கணேசன்(50), வடிவேல்(40) ஆகிய இருவரும் கடந்த 4ம் தேதி அதிகாலையில் வடிவேலுக்கு சொந்தமான பைபர் படகில் கடலில் மீன் பிடிக்க சென்றனர். ஆறு நாட்டிகள் மைல் தொலைவில் மீன் பிடித்து விட்டு, 4ம் தேதி இரவு 12 மணிக்கு கரைக்கு வந்து மீன் மற்றும் நண்டுகளை எடுத்துவிட்டு பாசிகளை சுத்தம் செய்யாமல் வலையை கடற்கரையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், மாலையில் வலையில் உள்ள பாசிகளை சுத்தம் செய்ய வலைகளை எடுத்த போது அந்த வலையினுள் 51எம்.எம். மில்க் என்ற வெடிபொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படை போலீசார் வெடி பொருளை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இந்த வெடிபொருள் வெடித்திருந்தால் அதிக சேதத்தை ஏற்படுத்த கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த வெடிபொருள் சிக்கியது எப்படி தீவிரவாதிகள் ஏதேனும் இப்பகுதியில் உள்ளனரா, என்பது குறித்து தீவிர விசாரணையில் கடலோரக்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்த வெளி பொருள் சிக்கிய சம்பவம் அப்பகுதி மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.