வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கவுள்ள இடைக்கால தேர்தல்களில் குடியரசு கட்சி வேட்பாளரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என டுவிட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு சபைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.
வரும் 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அதிபர் ஜோபைடன் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் உலக பெரும் பணக்காரரும், சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்குவாங்கியவருமான எலான் மஸ்க், கூறியது, நடக்க உள்ள இடைக்கால தேர்தல்களில் குடியரசு கட்சி வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.