புதுடில்லி: ''உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் பணியாற்றிய, 37 ஆண்டு கால பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் மனநிறைவுடன் கடந்து வந்துள்ளேன்,'' என, பணி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், 64, தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் யு.யு.லலித், நாளையுடன் (நவ.08) பணி ஓய்வு பெறுகிறார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நீதிமன்றம் விடுமுறை என்ற காரணத்தினால், தலைமை நீதிபதியின் பணி ஓய்வு அமர்வு உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
![]()
|
மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நான், உச்ச நீதிமன்றத்தில் என் பணியை துவங்கி, 37 ஆண்டுகள் ஆகிறது.
இங்குள்ள நீதிமன்ற எண் 1ல், அப்போதைய தலைமை நீதிபதி யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் முன்னிலையில், என் முதல் வழக்கில் ஆஜரானேன்.
இப்போது அவரது மகனிடமே தலைமை நீதிபதி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பணி ஓய்வு பெறுவது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த 37 ஆண்டு கால பயணம் மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஒவ்வொரு நிமிடத்தையும் மிக்க மகிழ்வுடன் கடந்து வந்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.