சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல்சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு ஆதரவாக மூன்று நீதிபதிகளும் எதிராக இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதன் பிறகு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் நவ.,12 ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கும் எனவும், சட்டசபையில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.