10% இட ஒதுக்கீடு சட்டம்: பலன்பெறப்போகும் பல்வேறு ஜாதிகள்

Updated : நவ 08, 2022 | Added : நவ 08, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், திமுக உள்ளிட்ட கட்சிகள் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தால் மற்ற ஜாதியினருக்கான வாய்ப்புகள்
10% இட ஒதுக்கீடு சட்டம்: பலன்பெறப்போகும் பல்வேறு ஜாதிகள்

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், திமுக உள்ளிட்ட கட்சிகள் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தால் மற்ற ஜாதியினருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.



இதனால், இந்த கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பை ஏற்கவில்லை. இதில், தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



10 சதவீத இட ஒதுக்கீட்டில் பயன்பெறும் ஜாதிகள் பட்டியல் | List of castes | 10 percent reservation

உண்மை என்னவெனில், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடானது பிராமணர்கள் மட்டுமல்லாமல், முற்பட்டோர் பட்டியலில் உள்ள மொத்தம் 79 தமிழக ஜாதிகள் பயன்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.



latest tamil news

அதாவது, 1985ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 'முற்பட்ட வகுப்பினர்' என வகைப்படுத்தப்பட்ட ஜாதிகளின் பட்டியலில் 79 சாதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஜாதிகள் அனைத்தும் 10 சதவீத இடஒதுக்கீட்டால் பலனடையும்.




முற்பட்ட ஜாதிகள் எவை:


முற்பட்ட ஜாதி / கிளைச் ஜாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள்:


1. ஆங்கிலோ இந்தியர் (511)


2. ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)


3. லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)


4. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)


5. ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)


6. முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)


7. தாவூத் (608)


8. கட்ஸு (சைத்)(609)


9. மீர் (610)


10. மைமன் (சைத்) (611)


11. நவாப் (612)


12. (அன்சார், தெக்காணி, துதிகுலா, லப்பை, இராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக், சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)


13. 501 செட்டியார் (701)


14. அச்சு வெள்ளாளர் (702)


15. ஆதி சைவர் (703)


16. ஆற்காடு முதலியார் (704)


17. ஆரியர் (705)


18. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)


19. ஆற்காட்டு வெள்ளாளர் (707)


20. அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)


21. ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)


22. பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)


23. பேரி செட்டியார் (711)


24. போகநாட்டு ரெட்டியார் (712)


25. பிராமணர் (713)


26. சோழபுரம் செட்டியார் (714)


27. தேவதிகர் (715)


28. எழுத்தச்சர் (716)


29. ஞானியர் (717)


30. ஜைனர் (718)



latest tamil news

31. கடையத்தார் (719)


32. கதுப்பத்தான் (720)


33. காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)


34. கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)


35. கார்காத்தார் (கார்காத்த வேளாளர், காரைக்காட்டு வேளாளர், காரிக்காட்டுப் பிள்ளை) (723)


36. காசுக்கார ஆச்சாரி (724)


37. காயல் செட்டி (725)


38. கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)


39. கொண்டியர் (727)


40. கொங்குச் செட்டியார் (728)


41. கொங்கு நாயக்கர் (729)


42. கொங்கு ரெட்டியார் (730)


43. கொந்தல வெள்ளாளர் (731)


44. கொட்டைக்கட்டி வீர சைவம் (732)


45. கோட்டைப்புரச் செட்டியார் (733)


46. கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)


47. குக வாணியர் (735)


48. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)


49. மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)


50. மொட்டை வெள்ளாளர் (738)


51. மூசிக பலிஜகுலம் (739)


52. நாடன் (நாட்டார்) (740)


53. நாயர் (மேனன், நம்பியார்) (741)


54. நாங்குடி வெள்ளாளர் (742)



55. நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)


56. ஒருகுண்ட ரெட்டி (744)


57. இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)


58. பணிக்கர் (746)


59. பத்தான் (பட்டானி), கான் (747)


60. ராஜபீரி (748)


61. ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)


62. ராவுத்த நாயுடு (750)


63. சைவச் செட்டியார் (751)


64. சைவ ஓதுவார் (752)


65. சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)


66. சைவ சிவாச்சாரியார் (754)


67. சைவ வெள்ளாளர் (755)


68. சானியர் (756)


69. க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)


70. திருவெள்ளறைச் செட்டியார் (758)


71. திய்யர் (759)


72. தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)


73. உலகமாபுரம் செட்டியார் (761)


74. வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)


75. வெள்ளாளப் பிள்ளைமார் (763)


76. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)


77. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)


78. வாரியர் (மலையாளம்) (766)


79. சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

Nagarajan - Tiruchirapalli ,இந்தியா
09-நவ-202220:05:23 IST Report Abuse
Nagarajan சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் ரிசர்வேஷன் இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை நீட்டிப்பது? அரசியல் சாசனத்தில் காலவரையரை நிர்ணயம் செய்யபடவில்லை என்பதற்காக இன்னும் எத்தனை தலைமுறை காத்திருக்க வேண்டும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-நவ-202206:18:09 IST Report Abuse
D.Ambujavalli இந்த லிஸ்டில்தான் கிறிஸ்தவர்கள், மார்க்கத்தவர் எல்லாரும் இருக்கிறார்களே அவர்கள் உங்கள் செல்லப்பிள்ளைகள் ஆனால் லிஸ்டில் பிராமணர்கள் இருப்பதால்தான் எதிர்ப்பா ? மாநிலத்தில் மூலையில் ஒரு கோயிலில் தன வீட்டு எண்ணெயில் விளக்கேற்றி, தான் உண்ணும் உப்பு சோற்றை காட்டும் ஏழை பிராமணனின் வாரிசு எல்லாம் படிக்கவோ, அரசு வேலைக்கு வரவோ உதவுவதால்தான் இது கண்ணை உறுத்துகிறது
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-நவ-202222:03:50 IST Report Abuse
Barakat Ali பிராம்மணர்களுக்குத்தான் இந்த பத்து பர்செண்ட்டில் ஆதாயம் என்று உளறிவந்த அறிவிலிகள் இனி வாயை மூடிக்கொள்ளட்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X