மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று(நவ.,09) விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர் உட்டபட அனைவரும் செல்போன் பயன்படுத்த உடனே ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தடை விதிக்க வேண்டும்.
கோயில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோயில்களில் நாகரிகமான உடைகளை அணிவது அவசியம். டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடை அணிந்து கோயிலுக்கு வருவதை ஏற்க முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்கள் என்ன சத்திரமா?
திருப்பதி கோயிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழகத்தில் சாமி சிலை முன் செல்பி எடுக்கப்படுகிறது. இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.