ஹைதராபாத் :''என் தொலைபேசி பேச்சுகள் ஒட்டுக்கேட்படுவதாக சந்தேகம் உள்ளது,'' என, தெலுங்கானா கவர்னர் தமிழிசை கூறினார்.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இங்கு, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை கவர்னர் பதவி வகிக்கிறார். ஆனால், ஆளும் கட்சியினர், கவர்னருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.கவர்னரின் எந்த செயல்பாட்டுக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
போனை ஒட்டு கேட்கறாங்க கவர்னர் தமிழிசை புகார்
|
பல விஷயங்களில் நேரிடையாகவே கவர்னரை, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கின்றனர். கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் நடத்தியுள்ளனர். ஆளும் கட்சியின் போக்கு குறித்து கவர்னர் தமிழிசை
ஏற்கனவே புகார் தெரிவித்து உள்ளார்.இந்நிலையில், ஹைதராபாதில் கவர்னர் தமிழிசை நேற்று கூறியதாவது:என் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. என்னுடைய போன் உரையாடல்கள் எங்கிருந்தோ பதிவு செய்யப்படுகின்றன. தெலுங்கானா மாநிலத்தில் ஜனநாயகம் கேள்விக்குறியாக உள்ளது. கவர்னர் பதவிக்கு எந்த மரியாதையும் தருவதில்லை. ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்குடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement