''பிரியாணி கடையை மிரட்டி பணம் கேட்டிருக்காங்க பா...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''தி.மு.க.,வினர் தானே ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''அதான் இல்லை... எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வினர் இந்த வேலையை செஞ்சிருக்காங்க பா... தி.மு.க., அரசை கண்டிச்சு, அ.தி.மு.க., சார்புல ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடத்தும்படி தலைமை உத்தரவு போட்டிருக்குது...
''சென்னை திருவல்லிக்கேணி பகுதி, அ.தி.மு.க., புள்ளி, பிரபல பிரியாணி கடையின் ராயப்பேட்டை கிளை நிர்வாகிக்கு போன் அடிச்சு, 'பொதுக்கூட்டத்துக்கு முழு செலவையும் ஏத்துக்கணும்'னு சொல்லியிருக்காரு பா...
![]()
|
''கட்சி புள்ளியின் தம்பி, அந்த ஏரியா கடைகள்ல மிரட்டி வசூல் பண்ணியதோட, பிரியாணி கடைக்கும் மிரட்டல் விடுத்திருக்கார்... பிரியாணி கடை நிர்வாகி, அ.தி.மு.க., புள்ளி பேசிய போன் பேச்சை பதிவு பண்ணிட்டாரு பா...
''இதை வச்சு, ராயப்பேட்டை போலீஸ்ல புகார் குடுத்திட்டாரு... போலீசார் விசாரணை நடத்திட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''இந்த சீனிவாசனும், விஜயகுமாரும் அடங்க மாட்டேங்காவளே...'' என, மொபைல் போனில் பேசியபடி வந்தார் அண்ணாச்சி.