இயற்கைக்கு, பொருளாதார நடவடிக்கைகள் சுமையாகக்கூடாது என பல நாட்டுத் தலைவர்கள் கருதத் துவங்கியுள்ளனர். இதனால், 'மொத்த உள்நாட்டு உற்பத்தி' மூலம், பொருளியல் வளத்தை கணிப்பது கேள்விக்குஉள்ளாகியுள்ளது.
இதற்கு மாற்றாக, பொருளாதாரத்தோடு, ஒரு நாட்டின் சுகாதாரம், சூழியல் அமைப்புகள், பருவநிலை போன்ற அளவைகள் உள்ள அட்டவணை மூலம் நாட்டின் வளர்ச்சியை அளக்கலாம் என, ஐக்கிய நாடுகளை சபை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகமாக மீன் பிடித்தல், காடுகளை அழித்தல், அதிகமாக பெட்ரோலியத்தை பயன்படுத்துதல் போன்றவற்றாலும், உள்நாட்டு உற்பத்தி வளர்வதுண்டு.
“இயற்கையை அழித்து, அதை வருவாயாகக் காட்டுவது சரியல்ல” என்கிறார் ஐ.நா.,வின் பொதுச் செயலரான அண்டோனியோ குடெரெஸ்.