கடல், அடர்காடு, பனிமலை போன்ற ஆளில்லா இடத்தில் சிக்கிக்கொள்வோர், உணவின்றி தவிக்க நேர்வதுண்டு. மீட்புப் பணியாளர்கள் போய்ச் சேர நாட்கள் கூட ஆகிவிடும். அத்தகைய சூழலில், ஆபத்தில் சிக்கியுள்ளோருக்கு உணவை அனுப்பினால் தான் அவர்களுக்கு மீட்போருடன் ஒத்துழைக்கவே முடியும்.
இதற்கென, பனிமலை விபத்துகள் அதிகம் நிகழும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஈபி.எப்.எல்., ஆய்வு நிலைய விஞ்ஞானிகள், அரிசிக் கட்டிகளையே இறக்கைகளாகக் கொண்ட ஒரு குட்டி ட்ரோனை வடிவமைத்துள்ளனர். இந்த ட்ரோனை ஆபத்திலிருப்போருக்கு அனுப்பிவிட்டால், அவர்கள் இறக்கையை உடைத்து அப்படியே உண்ணலாம். அடுத்த சில மணி நேரங்களில் மீட்போர் வரும்வரை அவர்கள் தெம்பாக காத்திருக்கலாம்.