திருச்சுழி--திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி மறவர் பெருங்குடியில் கண்மாய் 8 ஆண்டுகளுக்கு பின் நிறைந்துள்ளதையடுத்து, கரைகளை பலப்படுத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
7 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக் கண்மாய் மறவர்பெருங்குடி, வெள்ளையாபுரம், மீனாட்சிபுரம் உட்பட, கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. வரத்து கால் வாய் பராமரிப்பு இல்லாமல் போனதால், மழைநீரின்றி, கண்மாய் 8 ஆண்டுகளாக வறண்டு போனது.
தற்போது, பெய்து வரும் தொடர் மழையில் கண்மாய் நிறைந்து விட்டது. மழை தொடர்ந்தால், உபரி நீர் வெளியேறி ஊருக்குள் வந்து விடும். கண்மாயை சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதோடு , மறவர்பெருங்குடி - பந்தல்குடி ரோடு பகுதியில் உள்ள மழைநீர் வரத்து ஓடையை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.
கண்மாயில் தண்ணீர் தேங்கியிருந்தால் தான் ஊரில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் சுவையாக இருக்கும் ்வறண்டு போனால், உப்பு தன்மை கொண்டதாக மாறி விடுகிறது என மக்கள் கூறுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் தடுப்பு சுவர் கட்டி, கண்மாயில் தண்ணீர் தேங்கி இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.