ஸ்பெயினில் 'கிராமம் விற்பனைக்கு' : விலை வெறும் ரூ.2 கோடி தானாம்

Updated : நவ 13, 2022 | Added : நவ 13, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ஸ்பெயினில் குட்டி கிராமம் ஒன்று, ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஐரோப்பிய நாடான ஸ்பெயின் - போர்ச்சுக்கல் நாட்டில் எல்லையில் 'சால்டோ டி காஸ்ட்ரோ' என்ற கிராமம் அமைந்துள்ளது. தலைநகர் மேட்ரிட்டில் இருந்து சுமார் 3 மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், ஏறக்குறைய 30
Spain, Village for Sale, 44 Homes, Portugal border, abandoned village, ஸ்பெயின், கிராமம், விற்பனைக்கு, ரூ.2 கோடி,விலை

ஸ்பெயினில் குட்டி கிராமம் ஒன்று, ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஐரோப்பிய நாடான ஸ்பெயின் - போர்ச்சுக்கல் நாட்டில் எல்லையில் 'சால்டோ டி காஸ்ட்ரோ' என்ற கிராமம் அமைந்துள்ளது. தலைநகர் மேட்ரிட்டில் இருந்து சுமார் 3 மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட கிராமமாக உள்ளது. அங்குள்ள 40 வீடுகளும் எவ்வித பாரமரிப்பும் இன்றி இருந்து வருகிறது.

இந்நிலையில், 2 லட்சத்து 60 ஆயிரம் யூரோக்களுக்கு, (இந்திய மதிப்பில் ரூ.2 கோடி ) கிராமம் விற்பனைக்கு இருப்பதாக ஐடியலிஸ்டா இணையதளத்தில் அதன் உரிமையாளர் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தில் மொத்தம் 44 வீடுகள் உள்ளன. ஒரு ஹோட்டல், சர்ச், பள்ளி, பொது நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், பழைய காவலர் முகாம் உள்ளிட்டவை உள்ளன.


2000ம் ஆண்டு வாக்கில், கிராமத்தை சுற்றுலா தலமாக்க மாற்றும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர் வாங்கியுள்ளார். ஆனால், 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் அத்திட்டம் கிடப்பில் போடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.


latest tamil news

'இங்கே ஒரு ஹோட்டல் அமைக்க வேண்டுமென உரிமையாளருக்கு கனவு இருந்தது, ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. இன்னமும் அவரது திட்டம் நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறார் 'என உரிமையாளர் சார்பில் விளம்பரம் செய்துள்ள ராயல் இன்வெஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ரோனி ரோட்ரிக்ஸ் கூறினார்.


"நான் நகரத்தில் வசிப்பவன் மற்றும் கிராமத்தை பராமரிக்க முடியாததால் விற்கிறேன்" என 80 வயதாகும் உரிமையாளர் விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

Rajasekar - Indian ,இந்தியா
19-நவ-202213:38:25 IST Report Abuse
Rajasekar கவுன்சிலர் வீட்டுக்காரரே வாங்கும் சொற்ப்ப விலை அவர்களுக்கு
Rate this:
Cancel
14-நவ-202206:35:04 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ஸ்பெயின் கிராமத்தை வாங்குவதற்கு திமுக வட்ட செயலாளர்கள் கடும் போட்டி. தனியார் தீவுகள், மற்ற நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவிக்க தனியாக வெளிநாட்டு ரியல்எஸ்டேட் ஆரம்பித்து விடியல் அரசு சாதனை..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
14-நவ-202203:27:06 IST Report Abuse
NicoleThomson நம்ம தமிழக கார்பொரேட் குடும்பம் கவனிக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X