ஸ்பெயினில் குட்டி கிராமம் ஒன்று, ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயின் - போர்ச்சுக்கல் நாட்டில் எல்லையில் 'சால்டோ டி காஸ்ட்ரோ' என்ற கிராமம் அமைந்துள்ளது. தலைநகர் மேட்ரிட்டில் இருந்து சுமார் 3 மணி நேர பயண தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட கிராமமாக உள்ளது. அங்குள்ள 40 வீடுகளும் எவ்வித பாரமரிப்பும் இன்றி இருந்து வருகிறது.
இந்நிலையில், 2 லட்சத்து 60 ஆயிரம் யூரோக்களுக்கு, (இந்திய மதிப்பில் ரூ.2 கோடி ) கிராமம் விற்பனைக்கு இருப்பதாக ஐடியலிஸ்டா இணையதளத்தில் அதன் உரிமையாளர் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தில் மொத்தம் 44 வீடுகள் உள்ளன. ஒரு ஹோட்டல், சர்ச், பள்ளி, பொது நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், பழைய காவலர் முகாம் உள்ளிட்டவை உள்ளன.
2000ம் ஆண்டு வாக்கில், கிராமத்தை சுற்றுலா தலமாக்க மாற்றும் நோக்கத்துடன் அதன் உரிமையாளர் வாங்கியுள்ளார். ஆனால், 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் அத்திட்டம் கிடப்பில் போடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
![]()
|
"நான் நகரத்தில் வசிப்பவன் மற்றும் கிராமத்தை பராமரிக்க முடியாததால் விற்கிறேன்" என 80 வயதாகும் உரிமையாளர் விளம்பரத்தில் தெரிவித்துள்ளார்.