வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : இந்தோனேஷியாவில், 45 மணி நேரம் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், 'ஜி- - 20' மாநாடு இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 10 நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். பின், இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்தியர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
மாநாட்டில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்று பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் மோடி இந்தோனேஷியாவில் தங்கியிருக்கும், 45 மணி நேரத்தில், 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகவட்டாரங்கள் தெரிவித்தன.