திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர காதலன்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர காதலன்

Updated : நவ 15, 2022 | Added : நவ 14, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
புதுடில்லி: காதலித்து லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தவர்களில் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததுடன், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடல் பாகங்களை வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.26 வயதான ஷ்ரத்தா மும்மையில் உள்ள ஒரு மல்டிலெவல் நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு அப்தப்
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர காதலன்

புதுடில்லி: காதலித்து லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தவர்களில் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததுடன், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடல் பாகங்களை வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

26 வயதான ஷ்ரத்தா மும்மையில் உள்ள ஒரு மல்டிலெவல் நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு அப்தப் அமீன் பூனாவாலா என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்துள்ளனர்.



இவர்களின் காதலுக்கு ஷரத்தாவின் பெற்றொர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி அப்தப் அமீனுடன் டில்லியில் உள்ள மெஹ்ரவ்லியில் குடியேற்றி லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.




latest tamil news

அதன்பின்னர், ஷ்ரத்தா தன் குடும்பத்தினருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த நவ.,8ல் ஷ்ரத்தாவை பார்ப்பதற்காக தந்தை விகாஸ் மதான் டில்லி வந்துள்ளார். ஆனால் அவரது வீடு பூட்டியிருக்கவே சந்தேகமடைந்த விகாஸ், மெஹ்ரவ்லி போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கடந்த நவ.,12ம் தேதி பூனாவாலாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஷ்ரத்தாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர், பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.



latest tamil news

பூனாவாலா அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது: திருமணம் செய்யுமாறு ஷ்ரத்தா வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மே 18ம் தேதி ஷ்ரத்தாவை கொலை செய்த பூனாவாலா, உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.



இதனை வைப்பதற்காக 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப்பெட்டியை வாங்கி, அதில் உடல் பாகங்களை அடுக்கி வைத்துள்ளார்.



அதன்பின்னர் 18 நாட்களாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்கு சில உடல் பாகங்களை எடுத்து மெஹ்ரவ்லியில் உள்ள காட்டுப்பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் காட்டுப்பகுதியில் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (57)

konanki - Chennai,இந்தியா
16-நவ-202210:35:46 IST Report Abuse
konanki தமிழக நாடக காதல் தலைவர் இந்த செய்முறையை அவரது தும்பிகளுக்கு பரிந்துரை செய்கிறார்?
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
15-நவ-202216:52:44 IST Report Abuse
MARUTHU PANDIAR தான் கொன்ற பெண்ணின் உடலை வீட்டில் வைத்துக் கொண்டே வேறொரு பெண்ணையும் கூட்டிக் கொண்டு வந்து உல்லாசமாய் இருந்திருக்கிறானாம்++++.என்ன கொடுமை++++அப்படியானால் இவன் எப்படிப் பட்ட வெறியனாக இருப்பார்
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
15-நவ-202214:56:34 IST Report Abuse
MARUTHU PANDIAR ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி என்ற பெயர் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ உலகத்துலேயே அவுனுகளுக்கு தான் ஆயிரம் சதவீதம் பொருத்தம்.+++++ஆயிரம் பேரை கழுத்தறுத்து கொன்றால் உனக்கு நிரந்தர சுவர்க்கம் என்று ஒரு அறிவுரை , சொன்னால் அவன் சும்மாவா இருப்பான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X