கூகுள் டூடுல் போட்டியில் கோல்கட்டா சிறுவன் வெற்றி: டூடுல் டிசைனை கவுரவித்த கூகுள்

Updated : நவ 15, 2022 | Added : நவ 14, 2022 | |
Advertisement
புதுடில்லி: 2022ம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் எனும் சிறந்த கவன ஈர்ப்புச் சித்ததிரம் போட்டிக்கான வெற்றியாளரை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு கோல்கட்டாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி என்ற சிறுவன், இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்' என்ற டூடுலுக்காக இந்தியாவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.பிரபல நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன

புதுடில்லி: 2022ம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் எனும் சிறந்த கவன ஈர்ப்புச் சித்ததிரம் போட்டிக்கான வெற்றியாளரை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு கோல்கட்டாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி என்ற சிறுவன், இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்' என்ற டூடுலுக்காக இந்தியாவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.




latest tamil news



பிரபல நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்தரத்திற்கான போட்டியையும் நடத்தி வருகிறது.



இந்நிலையில், 2022 ம் ஆண்டு இந்தியானில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் வெற்றியாளராக கோல்கட்டாவைச் சேர்ந்த ஷ்லோக் முகர்ஜி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது சிறப்பு கனவ ஈர்ப்புச் சித்திரம் இன்று(நவ.,14) கூகுளில் இடம் பெற்றுள்ளது.


அடுத்த 25 ஆண்டுகளில், எனது இந்தியா என்ற கருப்பொருளில் உருவாக்கியுள்ள தனது சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்((கூகுள் டூடுல்) குறித்து வெற்றியாளர் ஷ்லோக் முகர்ஜி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:


* அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய அடுத்து 25 ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய விஞ்ஞானிகள் இருப்பார்கள். மனிதர்களின் மேம்பாட்டிற்காக சூழல் நட்பு ரோபோக்களை அவர்கள் உருவாக்குவார்கள்.



இந்தியாவில் இன்டர் கேலக்டிக் போக்குவரத்து நடைபெறும். அதாவது பூமிக்கும் விண்ணுக்கும் போக்குவரத்து நடக்கும். இந்தியாவில் யோகாவும், ஆயுர்வேதமும் முக்கியத்துவம் பெறும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுவதும் கூகுள் நடத்திய இந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1-10ம் வகுப்பு வரையிலான குழந்தைகளிடமிருந்து 1,15,000க்கும் மேற்பட்ட படைப்புகள் பெறப்பட்ட நிலையில், ஷ்லோக் உருவாக்கிய சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிப் பரிசாக, கல்லூரி உதவித்தொகையாக ரூ. 5 லட்சமும், பள்ளியில் தொழில்நுட்ப உதவிக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X