தி.மு.க.,வை முதன்முதலாக எதிர்க்க காங்., அழகிரி தயாராகிறார்

Updated : நவ 16, 2022 | Added : நவ 14, 2022 | கருத்துகள் (34+ 50) | |
Advertisement
ஒரே கூட்டணியில் இருந்தாலும், ஆளும் தி.மு.க.,வுக்கு எதிராக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, முதன்முதலாக குரல் கொடுத்துள்ளார். 10 சதவீத இட ஒதுக்கீடு, ராஜிவ் கொலையாளிகள் விடுதலை உள்ளிட்ட எண்ணற்ற விவகாரங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை பகிரங்கமாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், கூட்டணி முறியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க, அவர் மறுத்து
DMK, CONGRESS, ALAGIRI, TAMIL NADU CONGRESS CHIEF ALAGIRI, திமுக, காங் , அழகிரி, தயார்

ஒரே கூட்டணியில் இருந்தாலும், ஆளும் தி.மு.க.,வுக்கு எதிராக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, முதன்முதலாக குரல் கொடுத்துள்ளார். 10 சதவீத இட ஒதுக்கீடு, ராஜிவ் கொலையாளிகள் விடுதலை உள்ளிட்ட எண்ணற்ற விவகாரங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதை பகிரங்கமாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், கூட்டணி முறியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க, அவர் மறுத்து விட்டார்.சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் உரிய பங்கீடு தராதது, காங்கிரஸ் கட்சியினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


உடன்பாடு இல்லைஎனினும், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க., உடனான உறவை முறிக்க விரும்பாததால், அனைத்தையும் சகித்து, காங்கிரஸ் அமைதி காத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஏழைகளுக்கான, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சரி என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது; அதற்கு நேர்மாறாக, தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய, தி.மு.க., முடிவு செய்துள்ளது. தான் மட்டுறின்றி, கூட்டணி கட்சிகளையும் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வற்புறுத்துகிறது. இதை காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏற்கவில்லை.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் - தி.மு.க., இடையே மோதல் அதிகரித்த நிலையில், ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை, தங்களுடைய வெற்றியாக தி.மு.க., கொண்டாடியது. இதுவும் காங்கிரஸ் கட்சியினரிடம், கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் கட்சித் தலைவர் கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்றவர்கள் விடுதலையை, கூட்டணி கட்சியான தி.மு.க., கொண்டாடுவதை, காங்கிரஸ் கட்சியினர் ரசிக்கவில்லை.

இது, இரு கட்சியினருக்கும் இடையே விரிசலை அதிகரித்துள்ளது. இதை முதன்முறையாக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.நேரு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது உருவப் படத்திற்கு அழகிரி, சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தங்கபாலு, கோபண்ணா உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். கிண்டியில் உள்ள நேரு சிலைக்கும் மாலை அணிவித்தனர்.

பின், அழகிரி அளித்த பேட்டி:

இந்தியாவை உருவாக்கிய சிற்பி, நேரு. அவர் நாட்டின் முதல் பிரதமராகி இருக்காவிட்டால், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தானை போல, இந்தியா மோசமான நிலைக்கு சென்றுஇருக்கும்.ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேர் விடுதலையில், காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. கொலையாளிகளை வெளியே உலாவ விடுவது தவறு. சமூகத்தில் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்காது.


நாட்டுக்கு நல்லது அல்லதமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமானோர் சிறையில் இருக்கின்றனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வழக்கு கூட பதிவு செய்யாமல், சந்தேகத்தில் பலர் சிறையில் இருக்கின்றனர். அவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை?முஸ்லிம் இளைஞர்களுக்கு ஒரு நீதி; ராஜிவை கொன்றவர்களுக்கு ஒரு நீதியா? ஆறு பேர் விடுதலை நாட்டுக்கு நல்லது அல்ல.
கூட்டணி வேறு, கொள்கை வேறு. தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் இடையே எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; மத சார்பின்மை தான் எங்களை இணைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.கருத்து வேறுபாடு இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட, தமிழக காங்., தலைவர் அழகிரி, கூட்டணியை தொடர்வது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.


எம்.பி.,க்கள் குழப்பம்தென் மாநிலங்களைச் சேர்ந்த, 10 காங்கிரஸ் எம்.பி.,க்கள், சமீபத்தில் புதுடில்லியில் இரவு விருந்தில் சந்தித்து பேசினர். இதில், மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த எம்.பி.,க்களும் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது, பல விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்பாரா, தெலுங்கானாவில் பா.ஜ., வலுவாக காலுான்றி வருவதால், காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுமா.
ராஜிவ் கொலையாளிகள் விடுதலையை காங்., எதிர்க்கும் நிலையில், தி.மு.க., வரவேற்றுள்ளதால் கூட்டணி தொடருமா என, பல விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.அவர்கள் நடத்திய ஆலோசனையின் முக்கியமான அம்சம், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்தே அமைந்திருந்தது. லோக்சபாவுக்கு, 2024ல் நடக்கும் தேர்தலில், பா.ஜ., நிச்சயம் 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெறும். அதனால், எதற்காக வீணாக, 20 - 30 கோடி ரூபாயை பிரசாரத்துக்காக, ஒவ்வொரு தொகுதியிலும் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை, அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.


மாற்றுவதற்கான முயற்சிகடந்த எட்டு ஆண்டுகளில், 248 முறை வெளிநாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார். இதனால் சரிந்துள்ள செல்வாக்கை மீட்கும் வகையில், தற்போது பாரத ஒற்றுமை யாத்திரையில் அவர் ஈடுபட்டுள்ளார். தன் சொந்த பிம்பத்தை மாற்றுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக, எம்.பி.,க்கள் கருதுகின்றனர்.ஹிமாச்சல பிரதேசத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலின்போது, ராகுல் பிரசாரம் செய்யவில்லை. ராகுலின் சகோதரி பிரியங்கா பிரசாரம் செய்துள்ளது, கட்சிக்கு பெரும் பலமாக இருக்கும் என்று கருதுகின்றனர். இவ்வாறு, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக, இரு கட்சிக்கு உள்ளேயும் விவாதம் எழுந்துள்ளது.- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (34+ 50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-நவ-202220:37:34 IST Report Abuse
sankaranarayanan அழுகும் கிரி அழுகின்ற கிரி அழப்போகின்ற கிரி என்ற வினைத்தொகையில் இவர் கூட்டணிக்கு முத்தலாக் சொல்லிவிட்டார் போலிருக்கிறது
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
15-நவ-202219:14:03 IST Report Abuse
anbu சட்டத்தின் கீழ் விடுதலையான நபர்களை சுடலை அரசியல் ஆகியது. அது தனது ஆட்சியின் சாதனையாக கொண்டாடியது தான் தீம்கவுக்கு சிக்கல் ஆகப் போகிறது. இப்போது இன்றுவரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் பயங்கரவாத அமைப்புக்கள் தங்கள் சகாக்களை இதே போல அரசியல் வழிமுறையில் விடுதலை பெற்றுத் தர வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது தீயமுக கட்சிக்கு திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
15-நவ-202218:49:34 IST Report Abuse
anbu சட்டத்தின் படி விடுதலை பெற்று உள்ளார்கள். இவர்களை குற்றவாளிகளாக பொலிசாரால் வழக்கில் சிக்க வைத்ததில் பலவித குளறுபடிகள் உள்ளன. சம்பந்தப் பட்ட பலர் விசாரிக்கப் படாமல் மறைக்கப் பட்டுள்ளனர். ராஜீவ் குடும்பத்தினர் மன்னித்து விட்டனர். எனவே இவர்கள் விடுதலை சரியே. ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இன்னும் செயல் பாட்டில் தங்கள் குண்டு வெடிப்பு கலாச்சாரத்தில் மேலும் மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று நடத்திக் கொண்டு உள்ளனர். வன்முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் மூலம் கொல்வது தொடருகிறது. உலகம் முழுவதும் இது நடக்கிறது. தமிழகத்தில் இவர்கள் புனிதர்கள் ஆகிவிடவில்லை. வாஹாபிஷ கொள்கை அமைதியாக இருக்கும் முஸ்லிம்களிடம் திணிக்கப் பட்டு வளர்ந்து வருகிறது. மற்றைய முஸ்லிம் நாடுகளில் பர்தா, ஹிஜாப் என்பவற்றுக்கு எதிராக முஸ்லிம் பெண்களும் ஆண்களும் போராடுகின்றனர். ஆனா இந்தியாவில் அது வேண்டும் என்று போராட பின்னால் இருந்து இயக்குகின்றனர். இதனால் அமைதியாக சகோதரத்துவத்தை மதிக்கும்அப்பாவி முஸ்லிம் மக்களும் பாதிக்கப் படுகின்றனர். எனவே ராஜீவ் கொலையில் சிக்க வைக்க பட்ட கைதிகளுடன் இப்போது வரை கொலை வெறியுடன் இயங்கும் பயங்கரவாதிகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X